கொரோனா தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
பந்தலூர், கோத்தகிரியில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.
கோத்தகிரி
பந்தலூர், கோத்தகிரியில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.
கொரோனா தடுப்பூசி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. இங்கு அதிகாலை முதலே பொதுமக்கள் வர தொடங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் சிலர் சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதேபோன்று எருமாடு தனியார் மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர். ஓனிமூலா ஆதிவாசி காலனியில் வேலைக்கு சென்று திரும்பிய தொழிலாளர்களுக்கு இரவு வரை காத்திருந்து சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
நீண்ட வரிசை
கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 226 பேருக்கு முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. இதையொட்டி காலை 6 மணி முதல் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
இதுகுறித்து கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சிவகுமார் கூறியதாவது:- இன்று(ஞாயிற்றுக்கிழமை) கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி தடுப்பூசி மையத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி 700 பேருக்கு செலுத்தப்பட உள்ளது. எனவே தகுதி உள்ள நபர்கள் வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்றார்.
Related Tags :
Next Story