கொரோனா தடுப்பூசி செலுத்த வீடு, வீடாக டோக்கன்


கொரோனா தடுப்பூசி செலுத்த வீடு, வீடாக டோக்கன்
x
தினத்தந்தி 26 Jun 2021 9:44 PM IST (Updated: 26 Jun 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

மையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்த வீடு, வீடாக டோக்கன் வினியோகிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

ஊட்டி

மையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்த வீடு, வீடாக டோக்கன் வினியோகிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

தொற்று பரவும் அபாயம்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்ப கூடுதலாக கோவிஷீல்டு தடுப்பூசி நீலகிரிக்கு வந்தது. ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்த மட்டுமில்லாமல் டோக்கன்கள் பெறவும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 

அங்கு சமூக இடைவெளியை கடைபிடிப்பது கேள்விக்குறியானதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து கலெக்டர் ஆய்வு செய்து சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

அதிகம் பேர் வருகை

அதன்படி நேற்று ஊட்டியில் 4 பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவது தடுக்கப்படும். அந்த மையங்களில் தலா 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக ஏற்கனவே டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டு இருந்தது. ஊட்டி சாந்தி விஜய் பள்ளி மையத்தில் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. டோக்கன் பெறாதவர்களும் வரிசையில் காத்திருந்தனர். 

இதனால் அவர்கள் வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டனர். அவர்களது விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பின்னர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளிக்கு குறைவான டோஸ்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் தடுப்பூசியை வரும் நாட்களில் செலுத்தி கொள்ளலாம் என்று டோக்கன் பெற அதிகம் பேர் வந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

டோக்கன் வினியோகம்

இதை தொடர்ந்து கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி மையங்களில் இனி டோக்கன் எதுவும் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் டோக்கன் பெறுவதற்காக தடுப்பூசி மையங்களுக்கு வரவேண்டாம். டோக்கன்கள் அவரவர் வீடுகளில் வந்து நேரடியாக வினியோகிக்கப்படும். 

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தகுதி உள்ளவர்களை கண்டறிந்து வார்டு வாரியாக டோக்கன் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் எந்த துறை சார்பில் வழங்கப்படும் என்று அறிவிக்கவில்லை.


Next Story