வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஊட்டி
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தேயிலை தொழிற்சாலை முதல் பரலட்டி வரை பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் போடப்பட்ட சாலை,
மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.10.65 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சாலை, கக்குச்சி ஊராட்சி பகுதியில் 14-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.44.93 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பனஹட்டி சாலை, நபார்டு திட்டத்தின் கீழ் கரகல் முதல் மணிக்கல் வரை போடப்பட்ட சாலை உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
நிவாரண பொருட்கள்
இதைத்தொடர்ந்து தூனேரி ஊராட்சிக்கு உட்பட்ட சேலத்தா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை கலெக்டர் வழங்கினார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, செயற்பொறியாளர் சுஜாதா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story