வாணியம்பாடி; வருவாய் கோட்டாட்சியரின் தந்தை கொரோனாவுக்கு பலி
வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியரின் தந்தை கொரோனாவுக்கு உயிரிழந்தார்.
வாணியம்பாடி
-
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியராகப் பணியாற்றி வருபவர் காயத்திரி சுப்பிரமணி. இவரின் தந்தை சுப்பிரமணி (வயது 69). இவர், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆவார். அவரின் சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆகும்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணி வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், பின்னர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு, வருவாய்த்துறையினர் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story