மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டியூ. மாவட்ட செயலாளர் தங்கமணி தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் அங்காடி சேகர், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வராஜ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் உயர்்வை கண்டிப்பது. புதிய மின்சார சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
தாரை வார்க்க கூடாது
பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க கூடாது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திருமருகல்
இதேபோல திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸடு் கட்சி சார்பில் ஆர்ப்பட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் பொன்மணி தலைமை தாங்கினார். .விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஸ்டாலின் பாபு முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயபால், ஒன்றியக்குழு உறுப்பினர் லெனின், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி, ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு, ஒன்றிய தலைவர் பிரபாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
சிக்கல்
நாகை அருகே சிக்கல் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாகை ஒன்றிய குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பகு, மாவட்ட குழு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும், பெட்ரோல்-டீசல், விலை உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்
வேளாங்கண்ணி
நாகை மாவட்டம் கீழையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கீழையூர் ஒன்றிய விவசாய சங்க செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் அம்பிகாபதி கலந்து கொண்டு பேசினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன், மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாய்மேடு
வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். இதில் கட்சியின் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், இளையபெருமாள், வெற்றியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story