ஆசை வார்த்தை கூறி இளம்பெண் பலாத்காரம்; போலீஸ்காரர் பணியிடை நீக்கம்


ஆசை வார்த்தை கூறி இளம்பெண் பலாத்காரம்; போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 26 Jun 2021 10:33 PM IST (Updated: 26 Jun 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே திருமண ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்தவர் சேவியர் மகன் ஜாக்சன் (வயது 24). இவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இவர் அப்பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண், திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜாக்சன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஜாக்சன் தலைமறைவானார்.
திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மேற்பார்வையில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து ஜாக்சனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில்  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், போலீஸ்காரர் ஜாக்சனை பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.

Next Story