கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுபவர்கள் விற்பவர்கள் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பவர்கள் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் வேண்டுகோள் விடுத்துள்ளார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3 சிறப்புப்படை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் தொடர்ந்து சாராயம் காய்ச்சி மலைவாழ்ப்பகுதி மற்றும் மலை அடிவாரப்பகுதியில் உள்ள கிராமங்களில் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்த வண்ணம் உள்ளது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 சிறப்புப்படை அமைத்து கல்வராயன் மலை முழுவதும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படும் சாராய ஊரல்களை அழிப்பது, சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
அதேபோல் கல்வராயன் மலையை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து சாராயத்தின் தீமைகள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் சாராயம் விற்பனை செய்பவர்கள் பற்றியும், சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருட்களை கடத்துபவர்கள் பற்றியும் பொதுமக்களுக்கு தெரிந்தால் உடனடியாக 10581 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்தசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story