கொரோனா தடுப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு
கிராம பகுதிகளில் கொரோனா தடுப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு செய்தனர்.
பொள்ளாச்சி
கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் நகர் பகுதிகளை காட்டிலும், கிராமப்புறங்களில் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இதனால் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதனாால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் அறிவுறுத்தலின்படி, பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு தமிழ்மணி உத்தரவின்பேரில், பொள்ளாச்சி அருகே உள்ள ராமபட்டினம், நெகமம், கப்பலாங்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு போலீசார், நேரடியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதில், பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து யாராவது வந்தால் உடனடியாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். போலீசாரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story