மாத்தூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


மாத்தூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 26 Jun 2021 11:10 PM IST (Updated: 26 Jun 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

மாத்தூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

ஆவூர், ஜூன்.27-
குளத்தூர் தாலுகா, மாத்தூர் துணை மின் நிலையத்தின் இன்டஸ்ட்ரியல் 1 மற்றும் 3-வது உயரழுத்த மின் பாதையில் அவசரகால பராமரிப்பு பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி குமாரமங்கலம் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் கல்லூரி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை தமிழ்நாடு மின்சார வாரிய மாத்தூர் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story