ராணிப்பேட்டை; நியாய விலைக்கடையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு


ராணிப்பேட்டை; நியாய விலைக்கடையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 26 Jun 2021 11:55 PM IST (Updated: 26 Jun 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் நியாய விலைக்கடையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

சிப்காட்

ராணிப்பேட்டை புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆய்வு செய்தார். 

அப்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரண தொகை மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது வாலாஜா வட்ட வழங்கல் அலுவலர் விஜயசேகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story