தனியார் நிதி நிறுவனம் முன் சிவகாசி ஜெயலட்சுமி 3-வது நாளாக தர்ணா
தனியார் நிதி நிறுவனம் முன் சிவகாசி ஜெயலட்சுமி 3-வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
திருச்சி,
திருச்சி மன்னார்புரத்தில் செயல்பட்டுவரும் தனியார் நிதி நிறுவனத்தில் திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 2004-ம் ஆண்டு போலீசார் மீது பாலியல் குற்றச்சாட்டு புகாரை கொடுத்த சிவகாசி ஜெயலட்சுமி கடந்த 2 நாட்களாக திருச்சியில் உள்ள நிதிநிறுவனம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த ரூ.3¾ கோடியை திருப்பித்தரவேண்டும் என வலியுறுத்தி அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். தகவலறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் இதுகுறித்து புகார் அளிக்கும்படி அவரிடம் அறிவுறுத்தினர். ஆனால் நான் புகார் எதுவும் கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்துவிட்டார். இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக ஜெயலட்சுமி தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
Related Tags :
Next Story