தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியது
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 112 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர். தொற்று கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 815 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 143 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 782 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 200 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 66 ஆகும்.
Related Tags :
Next Story