வேலூர்; மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்


வேலூர்; மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2021 12:29 AM IST (Updated: 27 Jun 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேலூர்

வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சிம்புதேவன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக உறுதிபடுத்த வேண்டும். 

பொதுத்துறை நிறுவனங்களும், அரசுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயப்படுத்தும் கொள்கையை கைவிட வேண்டும். 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகள், 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் ஏகாம்பரம், திருப்பதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story