கரூரில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்


கரூரில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2021 12:37 AM IST (Updated: 27 Jun 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

கரூரில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்
டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடங்கி 7 மாதம் முடிந்ததை நினைவு கூறும் விதமாகவும், 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கு உரிய ஆதரவு விலை நிர்ணயம் செய்திட வேண்டும். 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆதரவு தெரிவித்து, எல்.பி.எப்., ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.யூ.டி.யூ.சி., எம்.எல்.எப்., எல்.எல்.எப்., உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் சுயாட்சி இந்தியா, சாமானிய மக்கள் நலக்கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், வாழ்க விவசாயி இயக்கம் உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னரில் இருந்து கரூர் தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story