விவசாய, தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய, தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாய, தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாய, தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
விருதுநகர் 
மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய இடங்களில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகரில் பழைய பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம் மற்றும் மாநில குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
சாத்தூர் 
அதேபோல சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார சாலை போக்குவரத்து சங்க தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ.  மாவட்ட செயலாளர் ராமர் முன்னிலை வகித்தார்.  இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பழனி குமார், சாத்தூர் நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் ஐயப்பன் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 
ஸ்ரீவில்லிபுத்தூர் 
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி. எப். கிளை தலைவர் வைரமுத்து தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சசிகுமார், நகர செயலாளர் ஜெயக்குமார் மற்றும் மரிய டேவிட் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
அருப்புக்கோட்டை 
அருப்புக்கோட்டையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு.,
எல்.பி.எப்., ஐ.என்.டி.யூ.சி., உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்ளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story