தாராபுரம்,காங்கேயத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம்,காங்கேயத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம்,
தாராபுரம்,காங்கேயத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம்
தாராபுரம் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் தினசரி பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி மக்களை நசுக்கும் மத்திய, மாநில அரசைக்கண்டித்து போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மண்டல தலைமைநிலைய செயலாளர் மு சுந்தரராஜ் தலைமை தாங்கினார்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் தினசரி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் மத்திய,மாநில அரசைகண்டித்தும், புதிய வேளாண் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என கூறி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். அப்போது கிளை செயலாளர் நல்லசேனாபதி, தலைவர் செல்லமுத்து, ஓய்வுபெற்ற நலச்சங்க பொதுச்செயலாளர் டி.ஜெயக்குமார், மற்றும் கூட்டுக்குழு அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காங்கேயம்
காங்கேயம் அரசு போக்குவரத்து மணிமனை முன்பு நேற்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் திருப்பூர் மண்டல தலைவர் சென்னியப்பன் தலைமை தாங்கினார். இதில் தொழிலாளர் மற்றும் வேளாண்மை திருத்தசட்டங்களைத் திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வரவேண்டும். மத்திய அரசு குறைந்தபட்ச கொரோனா நிவாரண உதவித்தொகையாக ரூ.7 ஆயிரத்து 500 வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கொடிகளை பிடித்து, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு.மண்டல துணைத்தலைவர் நடராஜன், பணியாளர் சம்மேளனம் பொதுச்செயலாளர் துளசிமணி, இந்திய தொழிற்சங்க பேரவையின் காங்கேயம் ஒன்றிய செயலாளர் சி.பொன்னுசாமி உட்பட அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story