சாக்கடையில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள்


சாக்கடையில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள்
x
தினத்தந்தி 27 Jun 2021 12:46 AM IST (Updated: 27 Jun 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

சாக்கடையில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள்

தாராபுரம், 
உலகம் முழுவதும் வெயிலை சமாளிக்க பொதுமக்கள் முதலில் நாடுவது குளிர்பானங்களைத்தான். அதனால்தான் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரையிலான குளிர்பானங்கள் கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன. பொதுமக்கள் எங்கு சென்றாலும் உடன் எடுத்து செல்ல ஏதுவாக குளிர்பானங்களை அந்தந்த நிறுவனங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்கின்றன. அதனை கடைகளில் வாங்கி செல்லும் பொதுமக்கள் குளிர்பானங்களை குடித்துவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை குப்பை தொட்டிகளில் போடாமல் பொது இடங்களில் தூக்கி வீசிவிடுகின்றனர்.
அவ்வாறு தாராபுரம் பகுதியில் தூக்கி வீசப்படும் குளிர்பான பாட்டில்கள் காற்றிலும், மழையிலும் அடித்து செல்லப்பட்டு சாக்கடை கால்வாய்களில் விழுகின்றன. நாளாக நாளாக சாக்கடை கால்வாயின் ஏதேனும் ஒரு பகுதியில் ஏராளமான பாட்டில்கள் குவிந்துவிடுகின்றன. அவை மொத்தமாக சேர்த்து சாக்கடை கால்வாயில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில் உற்பத்தியாகும் கொசுக்களால் நோய் பரவுகிறது. எனவே பொதுமக்கள் குளிர்பான பாட்டில்களை அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் போட வேண்டும் என தாராபுரம் பகுதியை சேர்ந்த சமூகநல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story