காங்கேயத்தில் 18 கிலோ கஞ்சாவுடன் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


காங்கேயத்தில் 18 கிலோ கஞ்சாவுடன் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
x
தினத்தந்தி 27 Jun 2021 12:49 AM IST (Updated: 27 Jun 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயத்தில் 18 கிலோ கஞ்சாவுடன் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காங்கேயம், 
காங்கேயத்தில் 18 கிலோ கஞ்சாவுடன் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து  27 ஆயிரத்து  800 பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாகன சோதனை
காங்கேயம் -கரூர் சாலை முத்தூர் பிரிவு அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும்  போலீசார் நேற்று காலை 8 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காங்கேயத்தில் இருந்து கரூர் நோக்கி வேகமாக சென்ற  காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது அந்த  கார்   நிற்காமல் வேகமாக சென்றது. இதை பார்த்த போலீசார் உடனடியாக ரோந்து வாகனத்தின் மூலம் அந்த  காரை பின்தொடர்ந்து துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அந்த காரில் ஒரு பெண், ஒரு ஆண் ஆகிய 2 பேர் இருந்தனர். மேலும் அந்த காரில் 18 கிலோ கஞ்சா அடங்கிய 9 பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம்  ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 800 இருந்துள்ளது.
கைது
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப்பெண்ணின் பெயர் ஜெயலட்சுமி (வயது 47) என்றும், அந்த ஆணின் பெயர் கவாஸ்கர் (31), வெள்ளகோவில் பகுதியை சேர்ந்தவர் என்றும், இவரும் காங்கேயம், திரு.வி.க. நகரில் குடியிருந்து வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரையும் கைது செய்த காங்கேயம் போலீசார், அவர்கள் கடத்தி சென்ற 18 கிலோ கஞ்சா, ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 800 மற்றும் அவர்கள் கஞ்சா எடுத்து வந்த  கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 18 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. கஞ்சாவை கடத்தி சென்றவர்களை மடக்கி பிடித்து பறிமுதல் செய்த போலீஸ் குழுவினருக்கு காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன் பாராட்டு தெரிவித்தார்.
16 பேர் கைது
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் மேற்பார்வையில் புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், நேற்று ஆகிய 2 நாட்களில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக ஊத்துக்குளி, மூலனூர் மற்றும் குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் தலா ஒரு வழக்கும், காங்கேயம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், மங்கலம் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும், உடுமலை போலீஸ் நிலையத்தில் 4 என மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்து 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 72 கிலோ எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்தவர்கள் மீது மூலனூர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், காங்கேயம் மற்றும் பல்லடம் போலீஸ் நிலையத்தில் தலா 1 வழக்கும் என மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 இருசக்கர வாகனம், 1 நான்கு சக்கர வாகனம் மற்றும் 20 கிலோ 35 கிராம் கஞ்சா, பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story