சிவகங்கை,
பராமரிப்பு பணி காரணமாக நாளை(திங்கட்கிழமை) மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பராமரிப்பு பணி
சிவகங்கை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(திங்கட்கிழமை) நடக்கிறது. எனவே சிவகங்கை ஊரக பகுதிகளான முத்துப்பட்டி, பொன்னாகுளம், கீழகுளம், பனையூர், வீரவலசை, ஆகிய கிராமங்களில் நாளை 10 மணி முதல் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதேபோல மலம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை காலை 10 மணி முதல் ஒரு மணி வரை சிவகங்கை, காமராஜர் காலனி பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதைெயாட்டி சிங்கம்புணரி நகர், கண்ணமங்கலப்பட்டி, நாட்டார்மங்கலம், செருதப்பட்டி, அ.காளாப்பூர், எஸ்.வி.மங்கலம், சிலநீர்பட்டி, செல்லியம்பட்டி, வையாபுரி பட்டி, பிரான்மலை, வேங்கைபட்டி, மேலப்பட்டி, அணைக்கரைப்பட்டி, கிருங்காக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை சிங்கம்புணரி உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்தார்.
சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட தெற்கு ஒன்றிய பகுதியான வடவன்பட்டி, மல்லாக்கோட்டை, ஜெயங்கொண்ட நிலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 29-ந்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக திருப்பத்தூர் உதவி செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்து உள்ளார்.