இழப்பீட்டு தொகையில் பங்கு கேட்டு தாயை தாக்கிய 2 மகன்கள்-மருமகள்கள் மீது வழக்கு; போலீசில் புகார்
தோகைமலை அருகே சகோதரரின் இறப்பிற்கு கிடைத்த இழப்பீட்டு தொகையில் பங்கு கேட்டு தாயை தாக்கிய 2 மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகைமலை
தாயிடம் பணம் கேட்டு தகராறு
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள பொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள். இவரது மகன்கள் தனபால், பழனிசாமி, மூர்த்தி. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் மூர்த்தி இறந்து விட்டார்.
இதனால் மூர்த்தியின் இறப்பிற்கு இழப்பீடாக ரூ.24 லட்சம் வழங்குமாறு ஒரு காப்பீ்டு நிறுவனத்திற்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து காப்பீடு நிறுவனம் மூலம் மூர்த்தியின் தாய் செல்லம்மாளின் வங்கி கணக்கில் முதற்கட்டமாக ரூ.10 லட்சம் வரவு வைக்கப்பட்டது. இதையடுத்து தங்களது சகோதரரின் இறப்பில் கிடைத்த பணத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என கேட்டு தனது தாய் செல்லமாளிடம் தனபால், பழனிசாமி ஆகியோர் சேர்ந்து கேட்டு நேற்று முன்தினம் தகராறு செய்துள்ளனர். அதற்கு அவர் கொடுக்க மறுத்துள்ளார்.
4 பேர் மீது வழக்கு
இதனால் ஆத்திரமடைந்த தனபால் மற்றும் அவரது மனைவி லட்சுமி, பழனிசாமி, அவரது மனைவி ரஞ்சிதம் ஆகிய 4 பேரும் சேர்ந்து செல்லம்மாளை தாக்கினர். இதனை தடுக்க வந்த செல்லமாளின் சகோதரி அமிர்தம் என்பவரும் தாக்கப்பட்டார்.
இதையடுத்து காயம் அடைந்த அமிர்தம் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அமிர்தம் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் செல்லம்மாளின் மகன்கள் தனபால், பழனிசாமி, மருமகள்கள் லட்சுமி, ரஞ்சிதம் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story