மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால் வேதனை:ரிக் வண்டி ஆபரேட்டர் தீக்குளித்து தற்கொலை + "||" + worker suicide

மனைவி பிரிந்து சென்றதால் வேதனை:ரிக் வண்டி ஆபரேட்டர் தீக்குளித்து தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் வேதனை:ரிக் வண்டி ஆபரேட்டர் தீக்குளித்து தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் வேதனை: ரிக் வண்டி ஆபரேட்டர் தீக்குளித்து தற்கொலை
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள கவுண்டிபாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 42). இவருடைய மனைவி அமுதா (41). இவர்களுக்கு வர்ஷினி (19) என்ற மகளும், நந்தகுமார் (17) என்ற மகனும் உள்ளனர். கணேசன் ரிக் வண்டியில் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். 
இந்தநிலையில் குடும்பத்தகராறு காரணமாக அமுதா கணவரிடம் கோபித்து கொண்டு தனது மகள், மகனுடன் பெற்றோா் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாமியார் வீட்டுக்கு சென்ற கணேசன் மனைவியிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அமுதா வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கணேசன் கவுண்டம்பாளையம் காலனியில் உள்ள அவரது வீட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு   நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேசன் நேற்று இறந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விஷம் குடித்து வாலிபர் சாவு
தேனி மாவட்டம் கூடலூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. மனைவி பிரிந்து சென்றதால் வேதனை: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் வேதனை: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை