வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்


வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2021 1:13 AM IST (Updated: 27 Jun 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.3,500 உதவிதொகையும் மருத்துவப்படி ரூ.500 மற்றும் வாழ்நாள் முழுவதும் இலவசப் பஸ் சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2021-2022-ஆம் ஆண்டிற்கு சிவகங்கை மாவட்டத்தில், பயன்பெறவிரும்பும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 1.1.2021 அன்று 58 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள்ளும் இருத்தல் வேண்டும். உதவித்தொகை பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தினை தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப் பெற்ற விண்ணப்பத்துடன், வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில் (ஆன்லைன் மூலம்) பெறப்பட்ட வருமானச்சான்று, ஆற்றிய தமிழ்ப்பணிகளுக்கான ஆதாரங்கள், ஆற்றி வரும் தமிழ்ப்பணிகளுக்கான தகுதி நிலைச்சான்று (தமிழறிஞர்; இருவரிடமிருந்து பெறப்படவேண்டும்) ஆகியவற்றை இணைத்து சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம், இரண்டாம் தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர், அலுவலகத்திற்கு நேரிலோ, அஞ்சல் வாயிலாகவோ ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் அனுப்பி வைத்தல் வேண்டும்.
இ்வ்வாறு அவர் கூறியுள்ளார்.



Next Story