திண்டுக்கல் மாவட்டத்தில் 7 பேரின் உயிரை பறித்த கொரோனா


திண்டுக்கல் மாவட்டத்தில் 7 பேரின் உயிரை பறித்த கொரோனா
x
தினத்தந்தி 27 Jun 2021 1:20 AM IST (Updated: 27 Jun 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 பேரின் உயிரை கொரோனா பறித்தது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும், இறப்பும் குறைந்து வருகிறது. அதிலும் நேற்று முன்தினம் கொரோனா இறப்பு இல்லாத மாவட்டங்களில் திண்டுக்கல்லும் இடம்பெற்று இருந்தது. 
இந்த நிலையில் நேற்று 4 மூதாட்டிகள் உள்பட 7 பேரின் உயிரை கொரோனா பறித்தது. 
அதன்படி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற திண்டுக்கல்லை சேர்ந்த 80 வயது மூதாட்டி, ஆத்தூரை சேர்ந்த 60 வயது மூதாட்டி, 68 வயது மூதாட்டி, சின்னாளபட்டியை சேர்ந்த 57 வயது ஆண், பழனியை சேர்ந்த 54 வயது ஆண், ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த 75 வயது முதியவர், தூத்துக்குடியை சேர்ந்த 69 வயது மூதாட்டி ஆகிய 7 பேர் நேற்று இறந்தனர். இதன்மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 581 ஆனது. 
இதற்கிடையே நேற்று மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 665 ஆக உயர்ந்தது. அதேநேரம் 56 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 315 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story