பழுது நீக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் படுகாயம்


பழுது நீக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் படுகாயம்
x
தினத்தந்தி 27 Jun 2021 1:20 AM IST (Updated: 27 Jun 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

போச்சம்பள்ளி அருகே கம்பத்தில் பழுது நீக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் படுகாயம் அடைந்தார்.

மத்தூர்:

மின் ஊழியர்
போச்சம்பள்ளி மின் வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணிபுரிந்து வருபவர் சசிக்குமார் (வயது 26). இவர் கடந்த மார்ச் மாதம் பணியில் சேர்ந்தார். தற்போது போச்சம்பள்ளி பகுதிகளில் மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை கொடமாண்டப்பள்ளி சந்திப்பு சாலையில் உள்ள மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடந்தன. 
இதையடுத்து சசிக்குமார் மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென்று அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீசார் விசாரணை
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மின் ஊழியர் சசிக்குமார் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் வழங்கப்பட்டதின் காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழுது நீக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story