கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கிருஷ்ணகிரி அண்ணா சிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் சிவராஜ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசு கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். 2020 புதிய மின்சார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பயிர்களுக்கு உரிய விலை நிர்ணயம் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
தேன்கனிக்கோட்டை
இதேபோன்று தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனபள்ளி கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகளின் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டத்தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். விவசாய சங்க வட்ட செயலாளர் அனுமப்பா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் வெங்கடேஷ், தமிழ்நாடு விவசாய சங்க துணை தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் ராஜா, சிவா, பட்டாபிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வேளாண் திருத்த சட்டத்தை திரும்பவேண்டும் என வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story