ஒட்டன்சத்திரம் அருகே சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ஒட்டன்சத்திரம் அருகே சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2021 1:33 AM IST (Updated: 27 Jun 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒட்டன்சத்திரம்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், சோளம், கம்பு, மக்காச்சோளம் ஆகியவற்றிற்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டன்சத்திரம் அருகே பொருளூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் தொப்பம்பட்டி ஒன்றிய துணைத்தலைவர் முருகசாமி தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் சண்முகவேல், கனகு, பொன்ராஜ், நல்லப்பன்,  வேலுசாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது தாங்கள் கொண்டு வந்த பாலை சாலையில் கொட்டி, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 
இதேபோல் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கே.ஆர்.கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விவசாயிகள் சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பழனி குளத்துரோடு ரவுண்டானா அருகே விவசாய சங்க நிர்வாகி செல்வராஜ் தலைமையிலும், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி அருள்செல்வன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Next Story