சிவகங்கை,
சிவகங்கை நகராட்சி கீழப்பூங்குடி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிவகங்கை வாலாஜா நவாப் அறக்கட்டளை ஆகியவை இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமை சிவகங்கை நேரு பஜாரில் உள்ள வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசலில் 2 நாட்கள் நடத்தின. சிவகங்கை வாலாஜா நவாப் அறக்கட்டளையின் தலைவர் அன்வர் பாட்சா தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்தசாரதி மருத்துவ அலுவலர் ஜீவபாரதி மேற்பார்வையில் தடுப்பூசி போடப்பட்டது. இதில் முதல் நாள் நடைபெற்ற முகாமில் 200 பேருக்கும், 2-வது நாளாக நேற்று நடைபெற்ற முகாமில் 250 பேரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.