ஏரியில் குளித்த பெண்ணை திட்டிய வாலிபர் மீது வழக்கு


ஏரியில் குளித்த பெண்ணை திட்டிய வாலிபர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 Jun 2021 2:20 AM IST (Updated: 27 Jun 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

ஏரியில் குளித்த பெண்ணை திட்டிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பனையடி தெற்கு தெருவைச் சேர்ந்த சகாதேவனின் மனைவி வினோதா(வயது 28). இவர் சம்பவத்தன்று கோடங்குடி நாகல் ஏரியில் குளித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதிக்கு கோடங்குடி நடுத்தெருவை சேர்ந்த ஜெயமணியின் மகன் தொல்காப்பியன்(22) வந்துள்ளார். அவர், குளித்துக் கொண்டிருந்த வினோதாவை, ஏரியில் குளிக்கக்கூடாது என்று கூறி தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வினோதா கரை ஏறாமல் நீண்ட நேரமாக ஏரியிலேயே இருந்ததாகவும், மற்ற பெண்கள் அச்சமடைந்து அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் தெரிகிறது. பின்னர் இது குறித்து தா.பழூர் போலீசில் வினோதா கொடுத்த புகாரின்பேரில் தொல்காப்பியன் மீது தகாத வார்த்தைகளால் திட்டுதல், பெண்ணை கொடுமைப்படுத்துதல், அத்துமீறி சிறைப்பிடித்தல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story