கொரோனாவுக்கு ஒருவர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 57 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 61 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 605 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 869 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்று 2,849 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story