விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 27 Jun 2021 2:21 AM IST (Updated: 27 Jun 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் கிராமம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது 55). விவசாயி. சில மாதங்களாகவே குடும்ப தகராறு நடந்து வந்ததாகவும், இதனால் அவர் மனவேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வயலுக்கு செல்வதாக கூறிவிட்டு, அவர் சென்றார். மறுநாள் ஆகியும் அவர் வீட்டுக்கு வராததால், அவரது உறவினர்கள் வயலுக்கு சென்று பார்த்தனர். அங்கு வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து அவர் இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் கொடுத்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் அங்கு சென்று, நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story