அம்பை, கல்லிடைக்குறிச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அம்பை:
அம்பை மற்றும் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்வதுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், போலீசார் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இந்த ஆய்வின்போது, அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராதா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story