குமரியில் இன்று 18 இடங்களில் தடுப்பூசி முகாம்
குமரியில் இன்று 18 இடங்களில் தடுப்பூசி முகாம்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 18 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. அதாவது செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பூதப்பாண்டி அரசு மருத்துவமனை, அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரி, ராஜாக்கமங்கலம், முட்டம், ஆறுகேசம், இடைக்கோடு, குட்டக்குழி, கோதநல்லூர் மற்றும் கிள்ளியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், குளச்சல், குழித்துறை, கருங்கல், அருமனை, குலசேகரம், பத்மநாபபுரம் மற்றும் சேனம்விளை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது. இதில் குழித்துறை மற்றும் பத்மநாபபுரம் ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு 250 டோஸ் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மற்ற இடங்களுக்கு 150 டோஸ் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு உள்ளன. அனைத்து முகாம்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story