அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் புலமைபித்தனுடன் சசிகலா பேச்சு
அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் புலமைபித்தனுடன் சசிகலா தொலைபேசியில் பேசினார்.
சென்னை,
அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் புலமைபித்தனிடம், சசிகலா நேற்று தொலைபேசியில் பேசினார். அதன் விவரம் வருமாறு:-
சசிகலா:- கட்சியோட தற்போதைய நிலைமை குறித்து நீங்க வருத்தப்பட்டு பேசியதை டி.வி.யில் பார்த்து ரொம்ப கஷ்டமாயிடுச்சு.
புலமைபித்தன்:- உங்ககூட பேசுனதுக்காக கட்சியில் இருந்து நீக்கினா என்ன அர்த்தம்? கட்சியை இப்படி அழிச்சிட்டு வராங்க. கட்சிக்கு அவைத்தலைவரும், பொதுச்செயலாளரும்தான் மிக முக்கியமானவங்க. ஆனால் இதுகுறித்து எதையுமே நினைக்காம செயல்பட்டா எப்படி?
சசிகலா:- இப்போ எனது முயற்சியும் அதுதான். எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இப்படி நிர்வாகிகளை நீக்கிட்டே வந்தா என்ன அர்த்தம்? இருந்தாலும் பரவாயில்லை. தலைவர் காலத்து ஆட்கள் எல்லாருமே என் கூட இருக்கீங்க. இது ரொம்ப உற்சாகத்தை தருது. அந்த காலத்துல உங்க பாட்டுகள் தானே தொண்டர்களுக்கு, கட்சிக்கு பெரிய உற்சாகத்தை தந்தது. அதெல்லாமே மறக்கமுடியாது. தலைவர் கூட நெருக்கமாக இருந்தவர் நீங்க.
புலமைபித்தன்:- உங்ககூட பேசினால் கட்சியை விட்டு நீக்குறாங்களாம். நான் இப்போ பேசியிருக்கேன். என்ன பண்றாங்கனு பார்ப்போம்.
சசிகலா:- விடுங்க பாத்துக்கலாம்.
புலமைபித்தன் சமீபத்தில் அ.தி.மு.க.வை விமர்சித்து டி.வி.க்களில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பழனியை சேர்ந்த மாலதி பெரியராஜ், தேனியை சேர்ந்த அமர்நாத், கடையநல்லூரை சேர்ந்த இசக்கி பாண்டியன், பெரியகுளத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பெரியவீரன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த லோகநாதன் ஆகியோருடனும் சசிகலா நேற்று தொலைபேசியில் உரையாடினார்.
Related Tags :
Next Story