முழுமை பெறாத நிலையில் போக்குவரத்துக்கு அனுமதி உத்தமபாளையம் புறவழிச்சாலையில் புழுதி பறப்பதால் விபத்து அபாயம்


முழுமை பெறாத நிலையில் போக்குவரத்துக்கு அனுமதி உத்தமபாளையம் புறவழிச்சாலையில் புழுதி பறப்பதால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 27 Jun 2021 5:54 PM IST (Updated: 27 Jun 2021 5:55 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் புறவழிச்சாலை பணிகள் முழுமை பெறாத நிலையில் போக்குவரத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் புழுதி பறப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.


உத்தமபாளையம்:
உத்தமபாளையம்-கூடலூர் இணைப்பு புறவழிச்சாலை திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. ஆனால் அதற்குள் வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைப்பணி முடிவடையாத பகுதியில் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. குறிப்பாக உத்தமபாளையம்- சின்னமனூர் சாலையில் வாகனங்கள் செல்லும் போது அதிகளவில் புழுதி பறக்கிறது. இதனால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரிவதில்லை. வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. 
எனவே இந்த புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 


Next Story