கூட்டாறு வரத்து கால்வாய் சீரமைக்கப்படாததால் மைத்தலை மண்ணடியான் குளத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல்


கூட்டாறு வரத்து கால்வாய் சீரமைக்கப்படாததால் மைத்தலை மண்ணடியான் குளத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல்
x
தினத்தந்தி 27 Jun 2021 6:12 PM IST (Updated: 27 Jun 2021 6:12 PM IST)
t-max-icont-min-icon

கூட்டாறு வரத்து கால்வாய் சீரமைக்கப்படாததால் மைத்தலை மண்ணடியான் குளத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


கூடலூர்:
கூடலூரில் மைத்தலை மண்ணடியான்குளம் உள்ளது. இந்த குளம் மூலம் ஒட்டாண்குளம், ஈஸ்வரன் கோவில் புலம், பாரவந்தான், ஒழுகுவழிசாலை பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் இருபோக நெல் விவசாயம் செய்துவருகின்றனர். முல்லைப்பெரியாற்றில் இருந்து வைரவன் வாய்க்கால் மூலம் கூட்டாறு வழியாக வினாடிக்கு 5 கன அடி வீதம் மைத்தலை மண்ணடியான் குளத்திற்கு 10 மாதங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதன்படி இந்த மாத கடைசியில் தண்ணீர் திறந்து விடப்படும். 
இந்தநிலையில் மைத்தலை மண்ணடியான்குளத்திற்கு தண்ணீர் வரும் கூட்டாறு வரத்து வாய்க்கால் சீரமைக்கப்படவில்லை. செடி, கொடிகள், முட்புதர்கள் அதிகம் வளர்ந்து தண்ணீர் வரும் பாதையை மறைத்து உள்ளது. இதனால் வாய்க்கால் மூலம் குளத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் செடி, கொடிகள் மற்றும் முட்புதர்களை அகற்றி வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story