வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆம்பூர் அருகே 588 மதுபாக்கெட்டுகள் பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆம்பூர் அருகே 588 மதுபாக்கெட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Jun 2021 8:23 PM IST (Updated: 27 Jun 2021 8:25 PM IST)
t-max-icont-min-icon

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆம்பூர் அருகே 588 மதுபாக்கெட்டுகள் பறிமுதல்.

ஆம்பூர்,

ஆம்பூர் அடுத்த சாத்தம்பாக்கம் அருகே உள்ள பாவர்த்தம்பட்டறை பகுதியில் வெளிமாநில மதுபான பாக்கெட்களை வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக உமராபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து, வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் வைத்து  விற்பனை செய்தது தெரியவந்தது. 

அதைத்தொடர்ம்கது மது பாக்கெட்டுகளை விற்பனை செய்த அதேப் பகுதியை சேர்ந்த சாந்தராஜ் என்பவருடைய மனைவி மஞ்சுளா (வயது 57) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் இருந்த 588 மது  பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story