வேலூரில் பிரியாணி வாங்க பொதுமக்கள் முண்டியடித்த கடைக்கு ‘சீல்'


வேலூரில் பிரியாணி வாங்க பொதுமக்கள் முண்டியடித்த கடைக்கு ‘சீல்
x
தினத்தந்தி 27 Jun 2021 8:32 PM IST (Updated: 27 Jun 2021 8:34 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் பிரியாணி வாங்க பொதுமக்கள் முண்டியடித்த கடைக்கு ‘சீல்'.

வேலூர்,

வேலூர் வேலப்பாடியில் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு பிரியாணி கடையில் சலுகை விலையில் மட்டன், சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனை வாங்க நேற்று ஏராளமானோர் கடையின் முன்பு குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கொரோனா தொற்று பரவும் வகையில் அருகருகே நின்று கொண்டிருந்தனர்.
இது குறித்து தகவலறிந்த வேலூர் தாசில்தார் ரமேஷ் தலைமையிலான வருவாய்த்துறை ஊழியர்கள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் பிரியாணி வாங்க நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது. 

கடை உரிமையாளர் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பிரியாணி விற்பனை செய்யாததால் உடனடியாக வியாபாரம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அந்த கடையின் ஷட்டரை பூட்டி வருவாய்த்துறை ஊழியர்கள் ‘சீல்' வைத்தனர்.
=======

Next Story