கானூர் தரைப்பாலத்தில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு


கானூர் தரைப்பாலத்தில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு
x
தினத்தந்தி 27 Jun 2021 8:43 PM IST (Updated: 27 Jun 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கானூர் தரைப்பாலத்தில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பட்டது.

சிக்கல்:
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கானூர் தரைப்பாலத்தில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பட்டது.
தரைப்பாலத்தில் பள்ளம்
குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து கடந்த 16-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதால் கடைமடை பகுதிகளில் உள்ள ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் வந்துள்ளது. நாகை மாவட்ட எல்லையான கீழ்வேளூர் அருகே கானூர் என்ற இடத்தில் ஓடம்போக்கி ஆற்றில் இருந் பிரியும் இலுப்பூர் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் ஆத்தூர், இலுப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 800 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 
இந்த வாய்க்காலின் மீது தரைப்பாலம் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த பாலம் நடுவே பள்ளம் ஏற்பட்டு மண் சரிந்து வாய்க்காலில் விழுந்தது. இதனால் வாய்க்காலில் இருந்து வயல்களுக்கு தண்ணீர் செல்வது தடை ஏற்பட்டது. மூலம் வயல்களுக்கு செல்லாமல் தடைப்பட்டுள்ளது. இதனால், குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள 700 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும் என விவசாய வேதனை அடைந்தனர். 
சீரமைப்பு
தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்து தண்ணீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் பிரசுரமானது.
 இதன் எதிரொலியாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து இலுப்பூர் வாய்க்கால் தரைப்பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைத்து, இதில் சிமெண்ட் பைப்புகள் அமைத்து தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
இதை தொடர்ந்து  பள்ளத்தை சீரமைத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் அந்த பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Next Story