மதுவில் விஷத்தை கலந்து குடித்து முதியவர் தற்கொலை
மதுவில் விஷத்தை கலந்து குடித்து முதியவர் தற்கொலை
சேத்துப்பட்டு
தேசூரை அடுத்த கேங்காபூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 65), கூலித்தொழிலாளி. அவர், கடந்தசில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர், மதுவில் கொக்கு மருந்தை கலந்து குடித்து விட்டு சத்தம் போட்டுள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தேசூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து, உயர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாமலை பரிதாபமாக உயிரிழந்தார். தேசூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story