தமிழகத்துக்கு தேவையான காவிரி நீர் கிடைப்பதை ஆணைய தலைவர் உறுதிபடுத்த வேண்டும் பி.ஆர். பாண்டியன் பேட்டி
தமிழகத்துக்கு தேவையான காவிரி நீர் கிடைப்பதை ஆணைய தலைவர் உறுதிபடுத்த வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
முத்துப்பேட்டை,
முத்துப்பேட்டை, கோட்டூர், திருத்துறைப்பூண்டி ஆகிய ஒன்றிய பகுதிகளில் தண்ணீர் இன்றி விளைநிலங்கள் காய்ந்து கிடக்கும் பகுதிகளை நேற்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாங்குடி கிராமத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 3½ லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்வதற்கு திட்டமிடப்பட்டு நேரடி விதைப்பு நடவு நடுவதற்கு நாற்று விடும் பணிகளும் நடைபெற்று முடிந்துள்ளன.
இந்தநிலையில் தண்ணீரின்றி நடவு பணி மேற்கொள்ள முடியாமலும், விதைத்த நெற்பயிர்கள் முளைக்காமல் கருகி வருவதை பார்த்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
18 ஆயிரம் கனஅடி திறக்க வேண்டும்
எனவே தமிழக அரசு உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து 18 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும். இதுவரையிலும் 10 ஆயிரம் கனஅடி வீதம் திறந்துவிடுவதால் ஆறுகள், கடைமடைக்கு தண்ணீர் சென்றிருக்கிறதே தவிர, எந்த ஒரு கிராமத்திற்கோ, விளை நிலங்களுக்கோ தண்ணீர் செல்லாததால் பாலைவனமாக காட்சி அளிக்கிறது.
காவிரி நீரை பெறுவதற்கு முதல்-அமைச்சர் ஆணையத்திற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். நீண்ட இடைவெளிக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஜூன், ஜூலை மாதத்திற்கான 40 டி.எம்.சி. தமிழகத்திற்கான தண்ணீரை உடனடியாக கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருப்பதோடு ஆணையத்தின் வேலை முடிந்ததாக நினைக்கக்கூடாது.
ஆணைய தலைவர் உறுதி செய்ய வேண்டும்
எனவே கண்காணிப்புக்குழு நேரடியாக கர்நாடகாவில் பார்வையிட்டு தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பெற்றுத்தருவதை ஆணைய தலைவர் உறுதி செய்ய வேண்டும். எனவே ஆணையம் விழிப்போடு செயல்பட்டு தண்ணீரை பெற்றுக்கொடுத்தால் தான் இந்த ஆண்டு குறுவை சாகுபடியும், சம்பா சாகுபடியும் தமிழகத்தில் மேற்கொள்ள முடியும். இல்லையெனில் விவசாயம் அழிந்து போகும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முத்துப்பேட்டை ஒன்றிய தலைவர் மாங்குடி சரவணன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர் வரம்பியம் அக்ரிஅருள், உயர்மட்ட குழு உறுப்பினர் மன்னன் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story