பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2021 10:42 PM IST (Updated: 27 Jun 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்.

குத்தாலம்,

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விலை உயர்வை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார்சைக்கிளை பாடையில் கட்டி ஊர்வலமாக எடுத்து சென்று சாவு மேளம் அடித்து கோஷமிட்டனர். இதேபோல் குத்தாலம் பஸ் நிலையத்தில் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story