ஊட்டி தடுப்பூசி மையத்தில் சுகாதார ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்


ஊட்டி தடுப்பூசி மையத்தில் சுகாதார ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 27 Jun 2021 10:49 PM IST (Updated: 27 Jun 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தடுப்பூசி மையத்தில் சுகாதார ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 4 பள்ளிகள், கூடலூரில் 3 பள்ளிகள், குன்னூரில் 2 பள்ளிகள், கோத்தகிரியில் 3 பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவிஷீல்டு 2-வது டோஸ் செலுத்தும் முகாம் நடந்தது.

 ஊட்டி சாந்தி விஜய் பள்ளியில் முதல் டோஸ் செலுத்த காலை முதலே மக்கள் காத்திருந்தனர். பின்னர் வந்த சுகாதார குழுவினர் 2-வது டோஸ் மட்டுமே செலுத்தப்படும் என்று தெரிவித்தனர். இதனால் வரிசையில் காத்திருந்தவர்கள் சுகாதார ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் 2-வது டோஸ் செலுத்துபவர்களை மட்டும் வரிசையில் நிற்க வைத்து, முதல் டோஸ் செலுத்த வந்தவர்களை வெளியே அனுப்பினர். அவர்கள் நுழைவுவாயில் முன்பு காத்திருந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story