பீல்டு மார்ஷல் கல்லறையில் ராணுவத்தினர் மரியாதை
13-வது ஆண்டு நினைவு நாளையொட்டி பீல்டு மார்ஷல் கல்லறையில் ராணுவத்தினர் மரியாதை செலுத்தினர்.
குன்னூர்
இந்திய ராணுவத்தில் பீல்டு மார்ஷலாக இருந்த ஷாம் மானெக் ஷா இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் போரின் போது இந்தியா வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.
வங்கதேசம் நாடு உருவாக காரணமாக இருந்தவர். பணி ஓய்வுக்கு பின்னர் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் தங்கியிருந்தார்.
கடந்த 27.6.2008-ந் தேதி தனது 94 வயதில் இறந்தார். பின்னர் அவரது உடல் ஊட்டியில் பார்சி கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பீல்டு மார்ஷல் ஷாம் மானெக் ஷாவின் 13-வது ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது கல்லறையில் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் பயிற்சி மையம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாதுகாப்பு துறைத்தலைவர், முப்படை தளபதிகள், ராணுவ பாதுகாப்பு பயிற்சி கல்லூரியின் கமாண்டன்ட் மற்றும் வெலிங்டன் நிலைய கமாண்டர் சார்பாக ராணுவத்தினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மேலும் கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்ற 50-வது ஆண்டை நினைவுகூர்ந்து கொண்டாடப்பட்டது.
Related Tags :
Next Story