இருசக்கர வாகனம், செல்போன் திருடிய 3 பேர் சிக்கினர்


இருசக்கர வாகனம், செல்போன் திருடிய 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 27 Jun 2021 11:29 PM IST (Updated: 27 Jun 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகனம், செல்போன் திருடிய 3 பேர் சிக்கினர்

திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள சவுடார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 40). கட்டிட தொழிலாளி. இவர் திருமங்கலம்  இந்திராகாலனி பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றார். அப்போது தனது இருசக்கர வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்தி விட்டுச் சென்றார். வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை.  இதேபோல் கப்பலூரை சேர்ந்த முத்துபாண்டி(வயது 33). இவருடைய மனைவி கருப்பாயி. இவர் நடைபயிற்சி சென்றபோது, 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். மேலும் உச்சப்பட்டி அருகே உள்ள தருமத்துப்பட்டியைப சேர்ந்த கார்த்திக் என்பவரை வழிமறித்து இரண்டு பேர் செல்போனை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து  திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தியதில் நேற்று கப்பலூர் சுங்கச்சாவடியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் திருமங்கலம் அருகே உள்ள மேல உரப்பனூரை சேர்ந்த சிவசூரியா(22), சுந்தரபாண்டியன்(23), கீழே உரப்பனூரை சேர்ந்த பிரதீப்(26) என்பதும், இவர்கள் இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story