27 பேருக்கு செயற்கை கால், கைகள் பொருத்தம்


27 பேருக்கு செயற்கை கால், கைகள் பொருத்தம்
x
தினத்தந்தி 27 Jun 2021 11:31 PM IST (Updated: 27 Jun 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

27 பேருக்கு செயற்கை கால், கைகள் பொருத்தம்

கோவை

கோவை அரசு ஆஸ்பத்திரியில் முட நீக்கியல் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் எடை குறைந்த செயற்கை கால் தயாரிக்கும் மையம் 10 மாதங்க ளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 

இங்கு கொரோனா சிகிச்சை பணிகளுடன், சர்க்கரை நோயால் கால்களை இழந்த நோயாளிகளுக்கு, காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை கால் இலவசமாக பொருத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கடந்த 10 மாதங்களில் 6 பெண்கள் உள்பட 27 பேருக்கு செயற்கை கை மற்றும் கால்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 

இதில், முட்டிக்கு மேல் காலை இழந்தவர்கள் 7 பேர், முட்டிக்கு கீழ் காலை இழந்தவர்கள் 19, கையை இழந்த ஒருவரும் ஆவர். 

இந்த பணிகளை மேற்கொண்ட முட நீக்கியல் துறை இயக்குனர் வெற்றிவேல் செழியன், இணை பேராசிரியர்கள் முகுந்தன், மாரிமுத்து அடங்கிய மருத்துவ குழுவினரை டீன் நிர்மலா பாராட்டினார்.


Next Story