வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உப்பு நீரால் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு
வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் உப்பு நீரால் குறுவை ெநற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சீர்காழி:
வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் உப்பு நீரால் குறுவை ெநற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
குறுவை சாகுபடி பணி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சட்டநாதபுரம், வைத்தீஸ்வரன்கோவில், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, அட்டக்குளம், நைனார் தோப்பு, நல்லான் சாவடி, எடக்குடி வடபாதி, புங்கனூர், கற்கோவில், ஆதமங்கலம், பெருமங்கலம், மருதங்குடி, வள்ளுவக் குடி, கொண்டல், காரைமேடு, அத்தியூர், கடவாசல், எடமணல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தற்போது பம்புசெட் மூலமும், மின் மோட்டார்கள் மூலமும் குறுவை சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
உப்பு நீரால் நெற்பயிர்கள் பாதிப்பு
தற்போது சீர்காழி பகுதியில் உள்ள நிலத்தடி நீர் குறைந்து உப்பு நீராகவும் காவி நீராகவும் மாறி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள மின் மோட்டார்கள் உப்பு நீராகவும் காவி நீராகவும் மாறிவிட்டதால் தற்போது நடவு செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் கருகி காய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தகவல் அறிந்த வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் உப்பு நீர் மற்றும் காவி நீரால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை உதவி வேளாண்மை அலுவலர் ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கூடுதல் மகசூல்
பின்னர் அவர் கூறுகையில்,
உப்பு நீர் உள்ள வயல்களில் குறைவான நீரை தேக்கி வைக்க வேண்டும். விவசாயிகள் தொடர்ந்து நெற்பயிருக்கு மாற்றாக மாற்று பயிரினை பயிரிடுவதன் மூலம் உப்பு நீரிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். மேலும் அதிக வருமானத்தை பெற முடியும். கோடைகாலங்களில் தழைச்சத்து உடைய பயிரினை பயிரிட்டு மீண்டும் நிலத்திற்கு உரமாக்குவதன் மூலம் உப்பு நீரின் தன்மை குறையக்கூடும். உப்பு நீரால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களில் கைத்தெளிப்பான் மூலம் உரங்கள் மற்றும் ஊட்டச்சத்து உரங்களை தெளிப்பதன் மூலம் கூடுதல் மகசூல் கிடைக்கும் என்றார்.
Related Tags :
Next Story