கிணற்றுக்குள் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு


கிணற்றுக்குள் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 28 Jun 2021 12:19 AM IST (Updated: 28 Jun 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றுக்குள் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்கப்பட்டது.

நொய்யல்
புகளூர் அருகே முருகம் பாளையத்தை சேர்ந்தவர் சார்லஸ் (40). இவரது வீட்டின் அருகே உள்ள ஒரு கிணற்றில் மேல் பகுதியில் அமர்ந்து இருந்த பெண் மயில் ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் விழுந்து தத்தளித்த மயிலை உயிருடன் மீட்டு பறக்க விட்டனர். 
தவிட்டுப்பாளையம் பகுதி யில் நேற்று மயில் ஒன்று அந்த வழியாக பறந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் திடீரென மயங்கி நிலையில்  கீழே விழுந்த மயில் சிறிது நேரத்தில் இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த மயிலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அந்த மயில் எப்படி இறந்தது என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story