அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் போக்குவரத்து மீண்டும் பழைய முறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் போக்குவரத்து மீண்டும் பழைய முறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
x
தினத்தந்தி 28 Jun 2021 12:23 AM IST (Updated: 28 Jun 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் போக்குவரத்து மீண்டும் பழைய முறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அனுப்பர்பாளையம், 
அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் போக்குவரத்து மீண்டும் பழைய முறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
அனுப்பர்பாளையம்புதூர்
திருப்பூர்-அவினாசி ரோட்டில் அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பு முக்கிய சந்திப்பாக உள்ளது. திருப்பூர்-அவினாசி, அவினாசி-திருப்பூர், 15 வேலம்பாளையம், அங்கேரிபாளையம் என 4 சாலைகளையும் இணைக்கும் பகுதி என்பதால் அந்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் தேங்குவதை தவிர்க்கவும், எளிதாக செல்லும் வகையிலும் அங்கு சிறிய பாலம் கட்டப்பட்டு, சாலை தரைமட்ட அளவு உயர்த்தப்பட்டது.
 அப்போது அங்கிருந்த தானியங்கி சிக்னல் அகற்றப்பட்டு, சாலையின் நடுவே மையத்தடுப்புச்சுவர் வைக்கப்பட்டதுடன், போக்குவரத்து முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதன்படி 15 வேலம்பாளையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் வாகனங்கள் அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பு வந்து திருப்பூர்-அவினாசி சாலையில் யு வடிவில் திரும்பி செல்ல வேண்டி உள்ளது. இதேபோல் அவினாசி-திருப்பூர் சாலையில் இருந்து 15 வேலம்பாளையத்திற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஒருவழிப்பாதையிலேயே சென்று வந்தன. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக காலை மற்றும் மாலை பள்ளி, கல்லூரி நேரங்களில் வாகனங்கள் தாறுமாறாக சென்று அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. 
போக்குவரத்து மாற்றம்
இதையடுத்து அந்த பகுதியில் பழைய முறையில் போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற வனிதா பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் போக்குவரத்தில் மாற்றம் செய்ய உத்தரவிட்டார். 
இதன் பேரில் திருப்பூர் வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் ஆலோசனையின்படி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போக்குவரத்து போலீசார் நேற்றுகாலை அங்கு மீண்டும் பழைய முறைக்கு போக்குவரத்தை மாற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டனர். இதன்படி அங்கு 15 வேலம்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு வாகனங்கள் செல்லும் வகையில் சாலை மையத்தடுப்பு சுவர்கள் அகற்றப்பட்டன. மேலும் போக்குவரத்தை சரி செய்வதற்கு போலீசார் பணியாற்றும் வகையில் போலீஸ் கூண்டும் அங்கு வைக்கப்பட்டது. 
மையத்தடுப்பு சுவர் அகற்றம்
இதேபோல் தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகில் திறந்த நிலையில் இருந்த சாலை மையத்தடுப்பு சுவர் அடைக்கப்பட்டது. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் வாகனங்கள் அதிகமாக செல்லும் என்பதால் நேற்று பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக போக்குவரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அனுப்பர்பாளையம்புதுர் சந்திப்பில் மீண்டும் பழைய முறைக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Next Story