மேலும் 68 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிப்பு எண்ணிக்கை 44,354 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43,094 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 89 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 739 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசு ஆஸ்பத்திரிகளில் 1,515 படுக்கைகள் உள்ள நிலையில் 1,287 படுக்கைகள் காலியாக உள்ள நிலையில் 228 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை மையங்களில் 1,853 படுக்கைகள் உள்ள நிலையில் 50 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில் 1,803 படுக்கைகள் காலியாக உள்ளன. மாவட்ட பட்டியலில் 35 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மாநிலப்பட்டியலில் 68 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 1.5 ஆகும்.
Related Tags :
Next Story