உடுமலையில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்
உடுமலையில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்
உடுமலை,
உடுமலை வட்ட அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கத்தினர் உடுமலை மத்திய பஸ்நிலையம் முன்பு பழனி சாலையில் நேற்று விழிப்புணர்வு ஓவியம் வரைந்துள்ளனர். அதில் போலீசார், மருத்துவ துறையினர், தூய்மை பணியாளர்கள் ஆகியோரின் பணிகளுக்கு நன்றி தெரிவித்து வாசகம் எழுதப்பட்டு, மருத்துவ துறையின் எம்ப்ளம், ஊசி, போலீசார் அணிந்திருக்கும் தொப்பி, தூய்மை பணியாளர்கள் பயன்படுத்தும் துடைப்பம் மற்றும் அனைவரும் கண்டிப்பாக அணிய வேண்டிய முககவசம் ஆகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
அதற்கு கீழே பெரிய அளவில் கொரோனா அரக்கனின் உருவம் வரையப்பட்டுள்ளது.அதற்கு கீழே"வெல்வோம் கொரோனாவை" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.இந்த விழிப்புணர்வு ஓவியத்தை பலர் நின்று பார்த்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story